செய்திகள்

மஹாபலி சக்கரவர்த்தி பலம் அளிப்பார் - கேரள மக்களுக்கு நிர்மலா சீதாராமன் ஓணம் வாழ்த்து

Published On 2018-08-24 22:03 IST   |   Update On 2018-08-24 22:03:00 IST
ஓணம் பண்டிகையையொட்டி கேரள மக்களுக்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #Onam #NirmalaSitharaman #RamnathKovind
புதுடெல்லி:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், இந்த அசாதாரணமான வேளையில் கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கேரளா மக்கள் படும் துயரங்களில் இருந்து விடுபடும் நம்பிக்கையை மகாபலி சக்கரவர்த்தி அவர்களுக்கு அளிப்பார். அதன்மூலம் அவர்கள் கேரளாவை ம்று நிர்மாணம் செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

ஓணம் பண்டிகை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் கேரளாவை சேர்ந்த சகோதர-சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பண்டிகை மக்களது வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். கேரளாவில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்கள் விரைவில் அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க வேண்டும். ஓணம் பண்டிகை அதற்கான புதிய தொடக்கமாக அமையட்டும் என தெரிவித்துள்ளார். #Onam #NirmalaSitharaman #RamnathKovind
Tags:    

Similar News