செய்திகள்

117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிம்லாவில் அதிக மழைப்பொழிவு

Published On 2018-08-14 01:22 IST   |   Update On 2018-08-14 01:22:00 IST
117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்டு மாதத்தில் சிம்லாவில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ShimlaHeavyrain
சிம்லா:

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலங்கள் முழுவதிலும் உள்ள ஏரிகள் நிறைந்து வருகின்றன. 

இந்நிலையில், இமாசலப்பிரதேசம் மாநிலத்தின்  தலைநகரமான சிம்லாவில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், கடந்த 1901ல் சிம்லாவில் 277 மிமீ மழை பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக ஆகஸ்டு மாதம் 13-ம் தேதி காலை 8 மணி வரை 172. 6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் 13-ம் தேதி காலை 8 மணியளவில் 73.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 2011ல் 75 மிமீ மழை பதிவானது. 

இதேபோல், லாஹவுல், ஸ்பிடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். #ShimlaHeavyrain
Tags:    

Similar News