செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பு - சிவசேனா, பிஜேடி புறக்கணிப்பால் பாஜகவுக்கு பலன்

Published On 2018-07-20 08:47 GMT   |   Update On 2018-07-20 08:47 GMT
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் புறக்கணித்துள்ளதால், மெஜாரிட்டி எண் குறைந்துள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. #NoConfidenceMotion
புதுடெல்லி:

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணித்துள்ளது.

இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News