செய்திகள்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர் உடல் ஐதராபாத் வந்தடைந்தது

Published On 2018-07-11 21:36 GMT   |   Update On 2018-07-11 21:36 GMT
அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர் சரத் கோப்புவின் உடல் நேற்று ஐதராபாத் வந்தடைந்தது. #IndianStudent #SharathKoppu
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கோப்பு (26). அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வந்தார்.  கடந்த 6-ம் தேதி இரவு அந்த பகுதியில் ஓட்டலுக்கு சென்ற சரத்தை சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சரத்தை சுட்டு கொலை செய்த குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்கள் 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

சரத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவரின் உடல் நேற்று ஐதராபாத் வந்தடைந்தது.

அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று இரவு சரத் கோப்புவின்  உடல் வந்தடைந்தது. அங்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா சரத்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #IndianStudent #SharathKoppu
Tags:    

Similar News