செய்திகள்

அயோத்தி ராமஜென்ம பூமி பகுதியில் அத்துமீறி நுழைந்த 5 பேர் சிக்கினர்

Published On 2018-07-10 20:00 GMT   |   Update On 2018-07-10 20:00 GMT
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி கோவில் அமைந்துள்ள பகுதியில் தடையை தாண்டி அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். #Ayodhya #RamJanmaBoomi
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் தடையை தாண்டி அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இதுதொடர்பாக, ராமஜென்ம பூமியின் டெபுடி சூப்பிரன்டெண்ட் ராஜேந்திர சிங் கூறுகையில், ராமர் கோவில் அருகில் வந்த ஒரு காரை மடக்கி நிறுத்தினோம். அதில் இருந்த பவான் சவுரையா, நந்த்லால் திவாரி, ஆஷிஷ், கவுரவ் பாண்டே மற்றும் உமாசங்கர் சேத் ஆகிய 5 பேரை தடுத்து நிறுத்தினோம்.

விசாரணையில், அவர்கள் வழிதவறி அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவித்தனர். அதை உறுதிசெய்த பின்னரே அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதித்தோம் என தெரிவித்தார். #Ayodhya #RamJanmaBoomi
Tags:    

Similar News