செய்திகள்

புதிய வாக்காளர்களை கவர காங்கிரஸ் இலக்கு- ராகுல்காந்தி அதிரடி திட்டம்

Published On 2018-07-08 08:25 GMT   |   Update On 2018-07-08 08:25 GMT
புதிய வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். #Congress #RahulGandhi
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் காங்கிரஸ் உள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கின்றன. மெகா கூட்டணியை அமைத்து பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கில் உள்ளது.

இந்த நிலையில் புதிய வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்களை கவர காங்கிரஸ் தவறிவிட்டது. இந்த முறை அப்படி நடந்து விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாணவர் அமைப்பு புதிய வாக்காளர்களை கவரும் செயல்களில் ஈடுபட்டது. இதே நடைமுறையை பாராளுமன்ற தேர்தலின் போது அனைத்து மாநிலங்களிலும் பின்பற்ற காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

கர்நாடக தேர்தலில் நல்ல பலன் கிடைத்தது போல் பாராளுமன்ற தேர்தலிலும் இதற்கு பயன் இருக்கும் என்று காங்கிரஸ் கருதுகின்றது. இதற்காக மாணவர் காங்கிரசார் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2019 பாராளுமன்ற தேர்தலில் 15 கோடி பேர் முதல் முறையாக வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு 18 வயது முதல் 23 வயது ஆகிறது.

இந்த புதிய வாக்காளர்களை கவர காங்கிரஸ் இலக்கு வைத்துள்ளது. #Congress #RahulGandhi
Tags:    

Similar News