செய்திகள்

ம.பி.யில் 9 வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை

Published On 2018-07-08 05:48 GMT   |   Update On 2018-07-08 05:48 GMT
மத்திய பிரதேசத்தில் ஈவுஇரக்கமின்றி 9 வயது சிறுமியை கற்பழித்த குற்றவாளிக்கு புதிய சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
போபால்:

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கடந்த மே 21-ந்தேதி 9 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். அது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கற்பழிப்பு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

ஆனால் மத்திய பிரதேசத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டசபையில் இந்த சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஏப்ரல் 21-ந்தேதி ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. புதிய சட்டத்தின் கீழ் சிறுமியை கற்பழித்த நபருக்கு முதன் முறையாக தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை சாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்யேந்திர சுக்லா தெரிவித்தார்.

இது குறித்து முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் கூறும் போது “கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இதன் மூலம் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுமிகளை கற்பழிப்பவர்கள் ஈவுஇரக்கமின்றி தூக்கிலிடப்படுவார்கள்” என்றார்.
Tags:    

Similar News