செய்திகள்

நேபாளத்தில் சிக்கி தவித்த இந்திய யாத்ரீகர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு

Published On 2018-07-07 08:56 GMT   |   Update On 2018-07-07 08:56 GMT
மானசரோவர் யாத்திரைக்கு சென்று வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 1430 இந்திய யாத்ரீகர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. #KailashMansarovar #KailashMansarovarpilgrims #Nepalpilgrimsevacuation
காத்மாண்டு:

நேபாளம் நாட்டின் மேற்கு பகுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இந்தியாவில் இருந்து மானசரோவர் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் சிக்கி கொண்டனர்.

குறிப்பாக, ஹில்ஸா மற்றும் சிமிகோட் மாவட்டத்தில் சிக்கி தவித்த அவர்களை மீட்கும் பணியில் நேபாள நாட்டின் விமானப்படை மற்றும் தனியாருக்கு சொந்தமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.



கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற மீட்புப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்தது. கடைசியாக 160 பேர் கொண்ட குழுவினர் இன்று மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட 1430 யாத்ரீகர்களும் நேபாளத்தில் உள்ள இந்திய எல்லையோர நகரங்களான நேபாள்கஞ்ச் மற்றும் சுர்கேட் நகரங்களில் கொண்டு சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு உதவி செய்வதற்காக நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என இங்குள்ள இந்திய தூதரகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KailashMansarovar   #KailashMansarovarpilgrims #Nepalpilgrimsevacuation
Tags:    

Similar News