செய்திகள்

பயணத்துக்கான அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார், டிரைவிங் லைசென்சை பயன்படுத்தலாம் - ரெயில்வே அறிவிப்பு

Published On 2018-07-05 18:46 GMT   |   Update On 2018-07-05 18:46 GMT
பயணத்துக்கான அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பொதுமக்கள் பயணிக்கலாம் என ரெயில்வே அறிவித்து உள்ளது. #Railway #DigigalAadhaar
புதுடெல்லி:

ரெயில் பயணிகள் மத்திய-மாநில அரசுகள் வழங்கிய அசல் அடையாள அட்டைகளில் ஒன்றை பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும். அதன்படி ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அட்டைகள் ஏற்கப்படுகிறது. இதனால் பயணிகளின் ஒரிஜினல் அட்டைகள் சில நேரங்களில் தொலைந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே இதை தடுப்பதற்காக டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பயணம் செய்யலாம் என ரெயில்வே அறிவித்து உள்ளது. மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட இணையபெட்டகம் (டிஜிலாக்கர்) செயலியில் சேமிக்கப்பட்டு உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பொதுமக்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மண்டல முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு ரெயில்வேத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘டிஜிலாக்கர் கணக்கில் ‘வழங்கப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சின் மென்நகல்களை ஒரு பயணி காட்டினால், அதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம். அதே நேரம் ‘பதிவேற்றப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் இருக்கும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என கூறப்பட்டு உள்ளது.  #Railway #DigigalAadhaar #tamilnews 
Tags:    

Similar News