செய்திகள்

மோடியின் புல்லட் ரெயில் கண்ணுக்கு தெரியாத மாய ரெயில் - ராகுல் காந்தி கிண்டல்

Published On 2018-07-04 19:59 IST   |   Update On 2018-07-04 19:59:00 IST
மத்திய அரசின் புல்லட் ரெயில் திட்டம் கண்ணுக்கு தெரியாத மாய ரெயில் போன்றது. இது ஒருபோதும் நிறைவேறாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #rahulgandhi #pmmodi
லக்னோ:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்த தொகுதிக்குட்பட்ட அரசு விளைபொருள் கொள்முதல் கூடத்தில் இருநாட்கள் காத்திருந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், புர்ஸத்கஞ்ச் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அனைத்து மட்டங்களிலும் வர்த்தகங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளது. மிகப்பெரிய தொழிலதிபர்கள் 15 பேர் வாங்கி இருந்த 2 லட்சம் கோடி ரூபாய் கடனை இந்த அரசு தள்ளுபடி செய்துள்ளது.

பெரிய வியாபாரிகளை வாழ வைப்பதற்காக சிறிய வியாபாரிகளின் முதுகெலும்பை பிரதமர் நரேந்திர மோடி உடைத்து விட்டார் என அவர் குற்றம்சாட்டினார். ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பின் மூலம் உங்கள் பாக்கெட்டுகளில் இருந்த பணத்தை பறித்து விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோருக்கு கொடுத்துள்ளார்.

எல்லையில் டோக்லாம் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் சீன அதிபருடன் நமது பிரதமர் ஒன்றாக அமர்ந்து ஊஞ்சல் ஆடுகிறார்.  

மோடியின் புல்லட் ரெயில் திட்டம் ஒரு மந்திர ரெயில் திட்டத்தை போன்றது. யதார்த்ததில் இது ஒருநாளும் சாத்தியமாகாது என்றும் ராகுல் குறிப்பிட்டார். #rahulgandhi #pmmodi
Tags:    

Similar News