செய்திகள்

சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோ - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக கடும் கண்டனம்

Published On 2018-06-28 16:56 IST   |   Update On 2018-06-28 16:56:00 IST
சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்த வீடியோ வெளியானது தொடர்பாக காங்கிரஸ் தெரிவித்துள்ள கருத்துக்கு பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #SurgicalStrike #RaviShankarPrasad
புதுடெல்லி:
    
காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி எச்சரித்ததை தொடர்ந்து, கடந்த 2016-ல் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. 

இந்த தாக்குதல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, அதற்கான ஆதாரங்கள் அடங்கிய வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  பாகிஸ்தான் அரசு சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் இந்திய ராணுவத்தின் உதவியுடன் இந்த வீடியோக்கள் நேற்று வெளியாகின.

இதற்கிடையே, டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க அரசு வாக்குகளுக்காக ராணுவ வீரர்களின் ரத்தத்தையையும் தியாகத்தையும் வைத்து அரசியல் பிரச்சாரம் செய்யும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோ வெளியானது தொடர்பாக காங்கிரஸ் தெரிவித்துள்ள கருத்துக்கு பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடும்  கனடனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சர்ஜிக்கல் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் நிச்சயம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சந்தோஷப்படுத்தும். லஷ்கர் அமைப்பிடம் இருந்து குலாம் நபி ஆசாத் சான்றிதழ் பெற்றது போல், காங்கிரசுக்கும் சில பயங்கரவாதிகள் சான்றிதழ் தருவார்கள். ராணுவத்தை அவமதிப்பது தான் காங்கிரசின் நோக்கமா? அரசியலை தாண்டி அனைவரும் ஒன்று சேர வேண்டும் என தெரிவித்துள்ளார். #surgicalstrike #RaviShankarPrasad
Tags:    

Similar News