செய்திகள்

ஜம்மு சென்றார் அமித்ஷா - நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை

Published On 2018-06-23 22:08 GMT   |   Update On 2018-06-23 22:08 GMT
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு நேற்று சென்றார். விமான நிலையத்தில் இருந்து விருந்தினர் மாளிகை சென்ற அமித்ஷா அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #AmitShah #Jammu
ஜம்மு:

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு நேற்று சென்றார். விமான நிலையத்தில் இருந்து விருந்தினர் மாளிகை சென்ற அமித்ஷா அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலில் இருக்கும் நிலையில் தற்போது அங்கு நிலவும் சூழல், கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மூத்த நிர்வாகிகள், கட்சியின் தேர்தல் பிரிவு நிர்வாகிகளுடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து அமித்ஷா ஆலோசித்தார்.

இதை தொடர்ந்து மாலையில் பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

காஷ்மீரில் மெகபூபா முப்தி அரசுக்கு அளித்த ஆதரவை 19-ந் தேதி பா.ஜனதா விலக்கி கொண்ட பிறகு ஜம்முவுக்கு அமித்ஷா சென்றுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  #AmitShah #Jammu #tamilnews 
Tags:    

Similar News