செய்திகள்

முதல்மந்திரி பெயரில் புதிய மாம்பழ வகை - உ.பி கண்காட்சியில் அறிமுகம்

Published On 2018-06-23 12:23 GMT   |   Update On 2018-06-23 12:23 GMT
உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் 2 நாள் மாம்பழ கண்காட்சியினை முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று துவக்கி வைத்தார். #MangoFest #UP
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு மாம்பழ கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 700 வகை மாம்பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாம்பழ கண்காட்சியை முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், நாட்டிலேயே அதிக அளவில் மாம்பழங்களை விளைவிக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம் என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளின் வருவாய் மற்றும் தேவைகளை இரு மடங்காக உயர்த்த தோட்டக்கலை உதவும் எனவும், இந்த கண்காட்சி அதற்கான முயற்சியாக நடத்தப்படுவதாகவும் அப்போது அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கண்காட்சியில் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தை கவுரவிக்கும் விதமாக உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் விளையும் மாம்பழ வகைக்கு ‘யோகி மாம்பழம்’ என பெயர் சூட்டப்பட்டது. #MangoFest #UP
Tags:    

Similar News