செய்திகள்

சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார் செஷெல்ஸ் அதிபர்

Published On 2018-06-23 11:22 GMT   |   Update On 2018-06-23 11:22 GMT
6 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள செஷெல்ஸ் அதிபர் டேனி பவுரி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். #Seychelles #SabarmatiAshram #DannyAntoineRollenFaure
காந்திநகர்:

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ் ஆகும். செஷல்ஸ் நாட்டில் உள்ள ஒரு தீவில் கடற்படை தளம் அமைப்பதற்காக இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 6 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பவுரி இன்று இந்தியா வந்தடைந்துள்ளார்.

இதையடுத்து, இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு செஷல்ஸ் அதிபர் டேனி பவுரி சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக சபர்மதி ஆசிரமத்தின் வருகை பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.



அந்த பதிவில் ‘வன்முறைக்கு எதிரான அகிம்சை எனும் கொள்கையை நாம் நமது குழந்தைகளுக்கும் இந்த உலகத்துக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்’  என குறிப்பிட்டுள்ளார்.

வரும் திங்களன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, செஷல்ஸ் அதிபர் டேபி பவுரி சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. #Seychelles #SabarmatiAshram #DannyAntoineRollenFaure
Tags:    

Similar News