செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் 7 நாள் பயணம் - சுஷ்மா சுவராஜ் இத்தாலி சென்றார்

Published On 2018-06-17 22:49 GMT   |   Update On 2018-06-17 22:49 GMT
ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 7 நாள் பயணமாக இத்தாலி சென்றடைந்தார். #SushmaSwaraj #Italy
புதுடெல்லி:

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 7 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின் போது அவர் இத்தாலி, பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய 4 நாடுகளுக்கு செல்கிறார். இதையொட்டி முதற்கட்ட பயணமாக சுஷ்மா சுவராஜ் நேற்று இத்தாலி புறப்பட்டு சென்றார்.

இது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஐரோப்பிய நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் விதமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஒரு வார காலம் அங்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அந்தந்த நாடுகளின் அரசியல் தலைவர்களுடன் அவர் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்கிறார். இது இந்தியாவுக்கும், அந்த 4 நாடுகளுக்கும் பயன் அளிக்கும்.

21-ந் தேதி, பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார். அதனை தொடர்ந்து அவர் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் கலைந்துரையாடுகிறார்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News