செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஹெலிகாப்டர்கள் - அமெரிக்கா அனுமதி

Published On 2018-06-13 06:29 GMT   |   Update On 2018-06-13 06:29 GMT
இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவிடமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஹெலிகாப்டர்கள் உட்பட பல கருவிகளை இந்தியா வாங்க உள்ளது. #Apache
புதுடெல்லி:

இந்திய பாதுகாப்புத்துறையின் பலத்தை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட தாக்குதல் நடத்த உதவும் வகையில் ஹெலிகாப்டர்கள் வாங்க அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி அமெரிக்காவிடம் இதுகுறித்து கோரிக்கை விடப்பட்டது. இந்தியா-அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்தவும், தெற்காசியாவின் அமைதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் நிலைபாட்டை அதிகரிக்கவும் உதவ வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தது.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ராணுவம், 6 புதிய ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்க முன்வந்துள்ளது. அதிக செலவில் புதிய ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. அதனை பாதுகாப்பு துறை நிறுவனம் அறிவித்துள்ளது.

அதே போல், நான்கு தீயை கட்டுப்படுத்தும் ரேடார், மிசல்ஸ், ஜிபிஎஸ் சிஸ்டம்ஸ், கனான்ஸ், டிரான்பாண்ட்ர்ஸ், சிமுலேட்டர்ஸ் மற்றும் பயிற்சி உபகரணங்கள் உட்பட பல பொருட்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மொத்த செலவு 930 மில்லியன் டாலர் ஆகும். #Apache

Tags:    

Similar News