செய்திகள்

மும்பை தாராவி குடிசைப்பகுதியை துபாய் நிறுவனத்தின் உதவியுடன் மேம்படுத்த பட்னாவிஸ் திட்டம்

Published On 2018-06-10 19:59 IST   |   Update On 2018-06-10 19:59:00 IST
மும்பை தாராவி குடிசைப்பகுதியை மேம்படுத்தும் திட்டத்தை, துபாய் நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தீர்மானித்துள்ளார். #DevendraFadnavis
துபாய் :

மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்கா, கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று புறப்பட்டு சென்றார்.

வழியில், துபாய் சென்ற அவரை  ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப் புரி வரவேற்றார். அங்கு, துபாய் மன்னர் வம்சத்தை சேர்ந்த பிரபல நிறுவனமான எம்.பி.எம் நிறுவனத்தின் தலைவர் முகமது பின் ஜூமா அல் மக்டோமை இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் மாகாராஷ்டிர மாநில நகர்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுடன் சேர்த்து, தாராவி குடிசைப்பகுதி மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த முகமது பின் ஜூமா அல் மக்டோம்  முதல்வர் தேவேந்திர பட்னாவிசிடம் தெரிவித்ததாக மாகாராஷ்டிர மாநில முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. #DevendraFadnavis
Tags:    

Similar News