செய்திகள்
1000 ஆட்டோக்கள் வரவேற்புடன் மும்பை செல்லும் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் செவ்வாய் கிழமை மும்பை செல்ல உள்ள நிலையில் அவரை 1000 ஆட்டோக்களுடன் வரவேற்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். #RahulGandhi #Congress
மும்பை :
அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக வரும் செவ்வாய் கிழமை மும்பைக்கு பயணம் செய்யும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் கட்சியின் பூத் மட்டத்திலான நிர்வாகிகள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், மும்பை வரும் ராகுல் காந்தியை வரவேற்க 1000 ஆட்டோ ஓட்டுனர்கள் முடிவு செய்துள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஞ்ஜய் நிரூபன் இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ராகுல் காந்தி சாதாரண மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கிறார். அவர்களின் மீது உள்ள அக்கறையால் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். எனவே, மும்பை வரும் ராகுலை சாதரண மக்கள் சிறப்பான முறையில் வரவேற்க முடிவு செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். #RahulGandhi #Congress