செய்திகள்

பெலாரஸ், லத்வியா, பின்லாந்து நாடுகளுக்கு பாராளுமன்ற குழு 10-ம் தேதி பயணம்

Published On 2018-06-08 14:21 GMT   |   Update On 2018-06-08 14:21 GMT
சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான பாராளுமன்ற எம்.பி.க்கள் குழு பெலாரஸ், லத்வியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஒருவார பயணமாக வரும் பத்தாம் தேதி புறப்பட்டு செல்கிறது. #LSSpeaker #parliament
புதுடெல்லி:

உலக நாடுகளில் உள்ள பாராளுமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காகவும், உறவுகளை பலப்படுத்தும் விதமாகவும் நமது நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்லெண்ண பயணமாக சில நாடுகளுக்குச் சென்று வருவது வழக்கம்.

அவ்வகையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான பாராளுமன்ற எம்.பி.க்கள் குழு பெலாரஸ், லத்வியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஒருவார பயணமாக வரும் பத்தாம் தேதி புறப்பட்டு செல்கிறது.

இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜிவ் பிரதாப் ருடி, சுதிப் பந்த்யோபாத்யாய், ஜெய்ஸ்ரீபென் பட்டேல், டாக்டர் கே,கேசவ் ராவ், அரவிந்த் சாவந்த், ஜி.வி.எல். நரசிம்ம ராவ் மற்றும் மக்களவை செயலாளர் ஸ்னேகலதா ஸ்ரீவத்சவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஒருவாரகால பயணத்தின்போது பெலாரஸ் குடியரசின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுக்காஷென்க்கோ மற்றும் பெலாரஸ் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை சபாநாயகர்களை இந்த குழுவினர் சந்திக்கின்றனர். இதேபோல், லத்வியா மற்றும் பின்லாந்து நாட்டு பாராளுமன்ற சபாநாயகர்களை சந்தித்துப் பேசும் இவர்கள் வரும் 18-ம் தேதி டெல்லி திரும்புகின்றனர். #LSSpeaker #parliament
Tags:    

Similar News