செய்திகள் (Tamil News)

பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் ரூ.79 ஆயிரம் கோடி

Published On 2018-05-30 22:42 GMT   |   Update On 2018-05-30 22:42 GMT
நமது நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 2017-18 நிதி ஆண்டில் ரூ.79 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

நாடு முழுவதும் 9 வங்கி ஊழியர்களின் சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கின. இன்றும் அந்த வேலை நிறுத்தம் தொடர்கிறது.

இந்த சூழலில் நமது நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 2017-18 நிதி ஆண்டில் ரூ.79 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஒரு மணி நேரத்துக்கு இவை ரூ.9 கோடி நஷ்டத்தை சந்திக்கின்றன என்றும் அவை கூறுகின்றன.

2017-18 நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் அளவு ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் கோடி ஆகும்.

இதன்மூலம் பொதுத்துறை வங்கிகளின் நஷ்டத்தின் அளவும், வராக்கடன் அளவும் வங்கி வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டி உள்ளன.

பொதுத்துறை வங்கிகளின் இத்தகைய பரிதாப நிலை காரணமாகத்தான் மத்திய அரசு கடந்த ஆண்டு வங்கிகளின் மறுமுதலீட்டு நிதியாக ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி வழங்கப்படும் என அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News