செய்திகள்

ரெயில் கழிவறையில் மரணமடைந்த பயணி - 2 நாட்களுக்கு பின் உடல் மீட்பு

Published On 2018-05-29 17:42 IST   |   Update On 2018-05-29 17:42:00 IST
ரெயில் கழிவறையில் மரணமடைந்த பயணியின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #PatnaKotaExpress
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரில் இருந்து கடந்த 24-ம் தேதி பாட்னா-கோடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சஞ்சய் அகர்வால் என்பவர் பயணம் செய்தார். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் சஞ்சய் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. ரெயில் கழிவறைக்கு சென்ற அவர் தனது மனைவியை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

தனக்கு உடல்நலம் சரியில்லை என கூறினார். அதன்பின் அவரை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த சஞ்சயின் மனைவி ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தார். ஆனால் அவர் தவறான ரெயில் எண் கூறியதால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதற்குள் எக்ஸ்பிரஸ் கோடாவிற்கு சென்று விட்டு மீண்டும் பாட்னா திரும்பியது. பாட்னாவில் வைத்து ரெயிலை சோதனை செய்த போலீசார் கழிவறையில் இருந்த சஞ்சயின் உடலை கடந்த ஞாயிற்று கிழமை மீட்டனர். இரண்டு நாட்களுக்கு பிறகு உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PatnaKotaExpress
Tags:    

Similar News