செய்திகள்

இதில் ரகசியம் எதுவும் இல்லை - சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த மேக்னா உற்சாக பேட்டி

Published On 2018-05-26 10:28 GMT   |   Update On 2018-05-26 10:28 GMT
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி மேக்னா, தனது வெற்றியில் ரகசியம் எதுவும் இல்லை என்றும் கடினமாக உழைத்ததாகவும் கூறினார். #CBSEResult2018 #CBSE12thTopper
புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் நொய்டாவைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் (99.8 சதவீதம்) பெற்று அசத்தியுள்ளார். அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவி மேக்னாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தனது சாதனை குறித்து மேக்னா கூறியதாவது:-

நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் முதலிடத்தைப் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. இந்த அளவிற்கு மதிப்பெண் பெற்றதில் எந்த ரகசியமும் இல்லை. கடினமாக உழைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும். நான் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் படிப்பேன் என எண்ணிப் பார்த்தது கிடையாது.

எனது ஆசிரியர்களும் பெற்றோரும் உண்மையில் எனக்கு உதவியாக இருந்தனர். படிக்கும் விஷயத்தில் ஒருபோதும் அவர்கள் எனக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். #CBSEResult2018 #CBSE12thTopper

Tags:    

Similar News