செய்திகள்
திருப்பதியில் குடும்பத்தினருடன் அமைச்சர் உதயகுமார் சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடியில் அமைதி நிலவுகிறது- அமைச்சர் உதயகுமார்

Published On 2018-05-26 10:19 IST   |   Update On 2018-05-26 10:19:00 IST
தூத்துக்குடியில் அமைதி திரும்பி வருவதாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் உதயகுமார் கூறினார். #TNMinister #Udhayakumar #Tirupati
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அமைச்சர் உதயகுமார் தனது குடும்பத்தினருடன் மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து வந்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்:- தமிழகத்தில் அமைதி நிலவவும், வளர்ச்சி பெறவும் தமிழக மக்கள் நலமுடனும் இருக்க வேண்டுமென நடை பயணமாக ஏழுமலையானை தரிசிக்க வந்தேன்.

தூத்துக்குடியில் அமைதி திரும்பி வருகிறது. பஸ்கள் இயக்கப்படுகின்றன. வியாபாரிகளும் பொது மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்றார்.

இரவு பத்மாவதி விடுதியில் தங்கிய அமைச்சர் உதயகுமார் இன்று அதிகாலை 5 மணிக்கு தனது குடும்பத்திருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். #TNMinister #Udhayakumar #Tirupati
Tags:    

Similar News