செய்திகள்

பெட்ரோல், டீசல் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்: நிதி ஆயோக் சொல்கிறது

Published On 2018-05-24 22:03 GMT   |   Update On 2018-05-24 22:03 GMT
விளம்பர மதிப்பு அடிப்படையில் பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பதால், அவர்கள் வரியை கூடுதல் அளவு குறைக்க வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். #NITIAayog #PetrolDiesel
புதுடெல்லி:

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 11-வது நாளாக நேற்று உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, ரூ.80.11-ல் இருந்து ரூ. 80.42 ஆனது.

டீசல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.72.14-ல் இருந்து ரூ.72.35-க்கு விற்பனை ஆனது.

நாளும் விலை உயர்ந்து, சாமானிய மக்களும், வாகன ஓட்டிகளும் அல்லாடுகிறபோதும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை முன் வரவில்லை.இந்த நிலையில் நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியின்போது, “வரியைக் குறைக்கும் தகுதி இருக்கிறது. ஆனால் வரி குறைப்பு நடவடிக்கையை மாநில அரசுகளும், மத்திய அரசும் சேர்ந்து செய்ய வேண்டும். விளம்பர மதிப்பு அடிப்படையில் பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பதால், அவர்கள் வரியை கூடுதல் அளவு குறைக்க வேண்டும்” என்று கூறினார்.

மாநில அரசுகள் 10-15 சதவீத அளவுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். #NITIAayog #PetrolDiesel
Tags:    

Similar News