செய்திகள்

போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்வது முதுகெலும்பில்லாத தமிழக அரசுக்கு அவமானம் - பிரகாஷ் ராஜ்

Published On 2018-05-23 14:45 IST   |   Update On 2018-05-23 15:04:00 IST
தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்டுகொன்ற தமிழக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக சாடியுள்ளார். #Bansterlite #SaveThoothukudi
பெங்களூரு :

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் :-



போராட்டகாரர்களை கொல்வது தமிழ்நாட்டுக்கு அவமானம், தமிழகத்தின் நோக்கமற்ற முதுகெலும்பற்ற அரசே.. போராட்டகார்களின் அழுகைக்குரல் உங்களுக்கு கேட்கவில்லையா ? காற்று மாசுபாடு குறித்த குடிமக்களின் வேதனைகள் முன்கூட்டியே உங்களுக்கு தெரியாதா ? அல்லது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மத்திய அரசின் இசைக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருக்கிறீர்களா ?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi
Tags:    

Similar News