செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரியின் மகன் மாரடைப்பால் மரணம்

Published On 2018-05-23 06:17 IST   |   Update On 2018-05-23 06:17:00 IST
பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியான பண்டாரு தத்தாத்ரேயா மகன் பண்டாரு வைஷ்ணவ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். #BJPMP #BandaruDattatreya
புதுடெல்லி:

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பண்டாரு தத்தாத்ரேயா. பாஜகவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முஷிராபாத் பகுதியில் இவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவரது மகன் வைஷ்ணவ் (21). மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு திடீரென வைஷ்ணவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள் அதே பகுதியில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

வைஷ்ணவ் மிகவும் இள வயதிலேயே மரணமடைந்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டாரு தத்தாத்ரேயா செகந்திராபாத் தொகுதி எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News