செய்திகள்

மத்திய மந்திரி சபை மாற்றம் - ஸ்மிருதி ராணியின் துறை பறிப்பு, பியூஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பு

Published On 2018-05-14 21:40 IST   |   Update On 2018-05-14 21:40:00 IST
மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி சிறிய மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அருண் ஜெட்லி மருத்துவமனையில் இருந்து திரும்பும் வரை பியூஷ் கோயல் அவரது துறைய கவனித்து கொள்வார். #CabinetReshuffle
புதுடெல்லி:

மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி சிறிய மாற்றம் செய்துள்ளார். நிதி மந்திரி அருண் ஜெட்லி அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவமனையில் உள்ள நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் நிதித்துறையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி ராணி வசமிருந்த தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன் ரதோர் வசம் அளிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கண்ணன்தானம் வசமிருந்த மிண்ணனுவியல் துறை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அலுவாலியாவுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News