செய்திகள்

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் சிபிஐ முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2018-05-14 09:48 GMT   |   Update On 2018-05-14 09:48 GMT
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, மெஹுல் சோஸ்கி வழக்கில் சிபிஐ இன்று முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #NiravModi #CBI #PNBScam
புதுடெல்லி:

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ இன்று முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.


பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைவருமான உஷா அனந்தசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் ப்ரஹ்மாஜி ராவ், சஞ்சிப் ஷரன், பொது மேலாளர் நேஷா அஹாத் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எனினும், வங்கி மோசடியில் மெஹுல் சோஸ்கியின் பங்கு என்ன என்பது குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. உஷா அனந்தசுப்பிரமணியன் உள்ளிட்ட பல வங்கி உயரதிகாரிகள் ஏற்கனவே சிபிஐயால் விசாரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#NiravModi #CBI #PNBScam
Tags:    

Similar News