செய்திகள்

உ.பி.யின் சீதாபூர் மாவட்டத்தில் நாய்கள் கடித்து ஒரே மாதத்தில் 7 குழந்தைகள் பலி

Published On 2018-05-13 16:08 IST   |   Update On 2018-05-13 16:08:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் நாய்கள் கடித்து குதறியதில் 7 குழந்தைகள் பலியாகியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கைராபாத் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மகேஷ்பூர் கிராமத்தில் இன்று நாய்கள் கும்பலாக சேர்ந்து கடித்து குதறியதில் ரீனா என்ற 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த மாதத்தில் மட்டும் நாய்கள் கடித்ததால் ஏற்பட்டுள்ள 7-வது உயிரிழப்பு சம்பவம் இதுவாகும். கைராபாத் பகுதியில் நாய்களால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆனந்த் குல்கர்னி நாய்களால் ஏற்படும் ஆபத்தை குறைக்கும் நோக்கில் அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இதனால், முன்பு இருந்ததை விட தற்போது இந்த இடத்தில் உலவும் நாய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.  #tamilnews
Tags:    

Similar News