செய்திகள்

குழந்தையை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு தூக்கு - 22 நாட்களில் தண்டனை

Published On 2018-05-13 07:25 GMT   |   Update On 2018-05-13 07:25 GMT
போபாலில் குழந்தையை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு 22 நாளில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போபால்:

மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த ஏப்ரல் 20-ந்தேதி தனது உறவினரின் 4 மாத பெண் கைக்குழந்தையை தூக்கி சென்று கற்பழித்து கொலை செய்தார்.

அவர் குழந்தையை தோளில் தூக்கி சென்று வீட்டு அருகே உள்ள வணிக கட்டிடத்துக்குள் செல்வதும், அதன்பிறகு வெளியே வரும் போது அவரிடம் குழந்தை இல்லாததும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவர் குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றார்.

அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக வழக்கு உடனடியாக இந்தூர் கோர்ட்டில் தொடரப்பட்டது.

பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற நவீன் மீதான வழக்கை கோர்ட்டு விரைவாக விசாரித்தது. இதில் போலீசார் குற்றப் பத்திரிகையை ஒரு வாரத்தில தாக்கல் செய்தனர்.

29 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து இந்தூர் கோர்ட்டு நீதிபதி வர்ஷா சர்மா நேற்று தீர்ப்பு அளித்தார். 4 மாத குழந்தையை கற்பழித்து கொன்ற நவீனுக்கு தூக்கு தண்டனை விதித்தார்.

இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், அழுவதை தவிர எதுவும் தெரியாத 4 மாத குழந்தையை மனித தன்மையன்றி கற்பழித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.

கொடிய குற்றம் செய்த நவீன் தூக்கு தண்டனைக்கு தகுதியானவன் என்று கூறினார். இந்த வழக்கில் 22 நாளில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவீனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் வெளி நாட்டு பெண் கற்பழிப்பு வழக்கில் ஜோத்பூர் கோர்ட்டு 18 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Tags:    

Similar News