இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. மவுசம் நூர்

Published On 2026-01-03 20:13 IST   |   Update On 2026-01-03 20:13:00 IST
  • 2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
  • தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் மவுசம் நூர், இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவருடைய மாநிலங்களை எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. விரைவில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறை மால்டா தக்ஷின் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் ஜெய்ராம் ரமேஷ், மேற்கு வங்க மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.

கட்சியில் இணைந்த மவுசம் நூர் "மேற்கு வங்கத்திற்கு மாற்றம் தேவை. அது என்னிடம் இருந்து தொடங்கட்டும். எந்தவொரு நிபந்தனையின்றி கட்சியில் இணைந்துள்ளேன். மம்தா பானர்ஜிக்கு என்னுடையா ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளேன். மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய ரெடியாக இருக்கிறேன். திங்கட்கிழமை ஒப்படைப்பேன்" என்றார்.

Tags:    

Similar News