செய்திகள்

வருமான வரியை ஒழித்துக் கட்ட வேண்டும் - சுப்பிரமணியசாமி

Published On 2018-05-11 21:46 IST   |   Update On 2018-05-11 21:46:00 IST
வருமான வரியை ஒழித்துக் கட்டுவதன் மூலம் அதிக அளவில் சேமிப்புகள் உருவாகும் என்று பாரதிய ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். #SubramanianSwamy #IncomeTax
ஐதராபாத்:

ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி பேசுகையில், நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பத்தினருக்கும், சுயதொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கும் வருமான வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் சதவீதம் மிக மிகக் குறைவாகும். இந்த சிறிய சதவீதத்துக்காக மக்கள் மீது வருமான வரி என்னும் சுமையை ஏன் சுமக்க வேண்டும்?... எனவே வருமான வரியை ஒழித்துக் கட்ட வேண்டும். இப்படி செய்தால் அதிக அளவில் சேமிப்புகள் உருவாகும். இதனால் முதலீடுகள் பெருகி நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானவரியை ஒழிப்பதன் மூலம் இழக்கும் தொகையைவிட மறைமுக வரி மூலம் அரசுக்கு அதிக தொகை கிடைக்கும்.

மேலும் இயற்கை வளங்கள் மற்றும் அலைக்கற்றை ஆகியவற்றை ஏலம் விடுதல் முறைக்கு கொண்டு வருவதன் மூலம் நிதி ஆதாரமும் நிறைய கிடைக்கும் என்றார்.

2G, 3G, 4G, 5G என வரிசையாக காத்திருக்கும் அலைக்கற்றையை ஏலம்விடலாம், நிலக்கரி சுரங்கத்தையும் ஏலம் விடலாம் என பேசிஉள்ளார். ஏழ்மை மற்றும் வேலையிண்மை பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால், 10 வருடங்களுக்கு நம்முடைய வளர்ச்சி  10 சதவிதமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். #SubramanianSwamy #IncomeTax
Tags:    

Similar News