செய்திகள்

நாட்டில் ஜி.எஸ்.டி. வரிமுறை அறிமுகமானது: மானியத்தை தொடங்கி வைத்தார் பிரணாப் முகர்ஜி

Published On 2017-06-30 19:02 GMT   |   Update On 2017-06-30 19:02 GMT
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலுக்கு வந்தது. பாராளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஜி.எஸ்.டி. மானியத்தை தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:

நாட்டில் ஜி.எஸ்.டி வரிமுறை அமலுக்கு வந்தது.

நேற்றிரவு நடைபெற்ற சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி இணைந்து ஜி.எஸ்.டி.யை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக ஜி.எஸ்.டி.யின் விரிவாக்கம் சரக்கு மற்றும் சேவை வரியாக (Goods and ServiceTax) இருந்து வந்த நிலையில், இனி சரக்கு மற்றும் எளிய வரியாக (Goods and Simple Tax) மாற்றப்பட்டது.



புதிய வரி முறை நாடு முழுக்க பொருட்களுக்கு ஒரே விலையை நிர்ணயிக்கும். இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு புதிய வரி முறை உதவிகரமாக இருக்கும். இந்திய ரயில்வேயை போல் மத்திய மாநில அரசுகள் இணைந்து கையாளும். நாட்டின் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி உதவியாக இருக்கும்.  

இந்தியாவில் புதிய வரிமுறை அமல்படுத்தப்பட்டதை வரவேற்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போதும், சில பகுதிகளில் புதிய வரிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News