செய்திகள்

இமாச்சலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங்குக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்

Published On 2017-04-10 09:06 GMT   |   Update On 2017-04-10 09:06 GMT
இமாச்சலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ர சிங்குக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:

இமாச்சலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ர சிங்குக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

இமாச்சலப்பிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங், அவரது மனைவி, மகன் மற்றும் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வீரபத்ரசிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை தனியாக பணபரிமாற்றச்சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் அவர்களுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதில் சிலர் முறைகேடான வழியில் ரூ. 10 கோடி சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 2009-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விதியை மீறி ரூ 14 கோடி சொத்து குவித்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளது.

Similar News