செய்திகள்

குஜராத்தை மலேரியா இல்லாத மாநிலமாக மாற்ற அம்மாநில அரசு புதிய முயற்சி

Published On 2017-03-15 17:59 GMT   |   Update On 2017-03-15 17:59 GMT
அடுத்த 5 வருடத்திற்குள் குஜராத்தை மலேரியா இல்லாத மாநிலமாக மாற்ற அம்மாநில அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காந்திநகர்:

அடுத்த 5 வருடத்தில் குஜராத் மாநிலத்தை மலேரியா அல்லாத மாநிலமாக மாற்ற அம்மாநில சட்டசபையில் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்க குஜராத் அரசு சார்பில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, வருகிற 2022-க்குள் குஜராத் மாநிலத்தில் மலேரியாவை ஒழிக்கும் முயற்சியாக உதவி ஹெல்ப்லைன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷங்கர் சவுத்ரி சட்டசபையில் இதனை அறிவித்தார். குஜராத்தில் மலேரியாவை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கான திட்டங்கள் இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளதாகவும், மலேரியா தொற்று உள்ள நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக 104 என்ற சிறப்பு உதவி எண்ணையும் அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. மலேரியா தொற்று இருப்பதாக மாநிலத்தின் எந்த இடத்தில் இருந்தாலும் மக்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அவர்களுக்கு தேவையான உதவி மற்றும் சிகிச்சையை அவர்களது இடத்திற்கே சென்று வழங்கவும் இந்த திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட உள்ளதாகவும் சவுத்ரி கூறினார்.

Similar News