இந்தியா

தெலுங்கானாவில் தோல்வி பயத்தில் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்த 2 மாணவர்கள் தற்கொலை

Published On 2025-05-06 14:45 IST   |   Update On 2025-05-06 14:45:00 IST
  • மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுத்து நிறுத்த தெலுங்கானாவில் அரசு சார்பில் உதவி செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • மனநல நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் நடந்தது. 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு பயத்தால் தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜங்கா பூஜா, 2023-ம் ஆண்டு முதன்முதலில் நீட் தேர்வு எழுதினார். அதில் தேர்ச்சி பெறவில்லை.

இதன் பிறகு, போட்டித் தேர்வுக்கு சிறப்பாகத் தயாராவதற்காக ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். கடந்த 4-ந்தேதி ஜங்கா மீண்டும் தேர்வு எழுதினார்.

இருப்பினும், ஒரு முறை தேர்வில் தோல்வியடைந்ததால், அவருக்கு பயம் ஏற்பட்டது.

தேர்வு மையத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு தனது பதில்களை மறுபரிசீலனை செய்தார். இந்த முறையும் நல்ல மதிப்பெண் பெற முடியாது என்று நினைத்தார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு நீட் தேர்வாளரான ராயி மனோஜ் குமார். இவர் நீட் தேர்வில் சிறப்பாகச் செயல்படாததால் மனமுடைந்தார்.

இவருடைய தந்தை ஆசிரியரியராக பணியாற்றி வருகிறார். தேர்வு எழுதிவிட்டு நேற்று வீடு திரும்பிய மனோஜ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுத்து நிறுத்த தெலுங்கானாவில் அரசு சார்பில் உதவி செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால் தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள மனநல நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News