பாராளுமன்றத்தில் 2 மசோதாக்கள் நிறைவேற்றம் - குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு
- விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்தார்.
- உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் தேவைக்கேற்ப மாற்றப்பட்டது.
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2025, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
விளையாட்டு வீரர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் வகையிலான தேசிய விளையாட்டு நிர்வாக மசோதாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் பிற்பகல் 3 மணியளவில் செய்தார்.
பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால், ஆளும் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் தேவைக்கேற்ப, சுயாட்சியை வலுப்படுத்தும் விதமாக தாக்கல் செய்யப்பட்ட தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதாவும் நிரைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்கள் தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளன. ஒப்புதலுக்கு பின் மசோதாக்கள் சட்டமாகும்.