இந்தியா

"1206" குஜராத் முன்னாள் முதல்வரை துரத்திய விதி.. பெரும் துரதிஷ்டமாக மாறிய அதிஷ்ட எண்!

Published On 2025-06-13 13:58 IST   |   Update On 2025-06-13 13:58:00 IST
  • மனைவி மற்றும் மகளைச் சந்திக்க லண்டன் சென்று கொண்டிருந்தார்.
  • அவரது ஆரம்பகால ஸ்கூட்டரிலும், அவர் முதலமைச்சரானபோது அவரது அதிகாரப்பூர்வ காரிலும் இருந்தது.

குஜராத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான விஜய் ரூபானி (68), நேற்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.

நேற்று (ஜூன் 12) விமானம் விமானம் 232 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் உட்பட 242 பேருடன் பயணித்தது. ரூபானி தனது மனைவி மற்றும் மகளைச் சந்திக்க லண்டன் சென்று கொண்டிருந்தார். விமானப் பதிவேட்டில் அவர் 2D இருக்கையில் பயணித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து விமானம் தீப்பிடித்ததில் அவருடன் 240 பேர் உயிரிழந்தனர்.

எண் 1206, ரூபானியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய எண் ஆக இருந்தது. அவர் தனது வாகனங்களின் எண் பலகைகளில் "1206" ஐப் பயன்படுத்தி வந்தார். இந்த எண் அவரது ஆரம்பகால ஸ்கூட்டரிலும், அவர் முதலமைச்சரானபோது அவரது அதிகாரப்பூர்வ காரிலும் இருந்தது. இது அவருக்கு அதிர்ஷ்ட எண்ணாக நம்பப்பட்டு வந்தது.

ஆனால், விதிவசமாக, ஜூன் 12 (12/06) அன்று அவரது மரணம் நிகழ்ந்தது ஒரு துயரமான நிகழ்வாக மாறியுள்ளது. ரூபானி ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை குஜராத்தின் 16வது முதல்வராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News