இந்தியா

ஒடிசாவில் பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் 10 பேர் பலி

Published On 2023-06-26 07:54 IST   |   Update On 2023-06-26 07:54:00 IST
  • அரசு பேருந்து- தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்
  • தனியார் பேருந்தில் திருமண நிகழ்ச்சியில கலந்து கொண்டு திரும்பியவர்கள் பயணம்

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் திகாபஹண்டி அருகே அம்மாநில அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அரசு பஸ் ராயகடா என்ற இடத்தில் இருந்து புவனேஸ்வர் சென்று கொண்டிருந்தது. அப்போது பெர்ஹாம்புரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அரசு பஸ் மீது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பலர் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள். தனியார் பேருந்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் கட்டாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News