செய்திகள்
சிவராஜ் சிங் சவுகான்

சிவராஜ் சிங் சவுகான் தடுத்து நிறுத்தப்பட்டதாக வைரலாகும் தகவல்

Published On 2021-11-19 05:12 GMT   |   Update On 2021-11-19 05:12 GMT
பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்து செல்லும் போது ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவு தலைப்பில் பிரதமர் மோடியின் பாதுகாவலர் சிவராஜ் சிங் சவுகானை தடுத்து நிறுத்தினார் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் பதிவு குறித்த இணைய தேடல்களில், வீடியோவில் சிவராஜ் சிங் சவுகானுடன் பேசிய போபால் மாவட்ட கலெக்டர் அவினாஷ் லாவினா வைரல் பதிவுகளில் உண்மையில்லை என தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கலெக்டர் அவினாஷை பிரதமரின் பாதுகாவலர் என வைரல் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.



பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 15 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்று இருந்தார். அங்கு பிர்சா முண்டா பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட வீடியோவே தவறான தலைப்பில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News