செய்திகள்

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்படவில்லை- தமிழிசை பேட்டி

Published On 2019-03-30 17:11 IST   |   Update On 2019-03-30 17:11:00 IST
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்படவில்லை. வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisai #kanimozhi #gsttax

ஓட்டப்பிடாரம்:

பா.ஜனதா மாநில தலைவரும் தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்படவில்லை. வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் வங்கி கடன் எளிதாக கிடைக்கிறது. மாதந்தோறும் ஜி.எஸ்.டி.கவுன்சிலிங் கூடுவதால் வரிகள் குறைக்கப்பட்டு வருகின்றன. 124 நாடுகளில் ஜி.எஸ்.டி. நடைமுறையில் உள்ளது. மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரிவிகிதம் குறைக்கப்படும். நடைமுறைக்கு சாத்திய மில்லாதவற்றை தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி பேசுகிறார். 

தூத்துக்குடியை பொறுத்தவரை குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மேலும் வளர்ச்சி பெற புதிய திட்ட அறிக்கையை கொடுத்துள்ளேன். ராஜ்யசபாவில் இதுவரை தூத்துக்குடியை பற்றி பேசாத கனிமொழிக்கு திடீர் அக்கறை ஏன்? அரசியலில் எனக்கு பயமே கிடையாது.

நாங்கள் சொன்னதை செய்வோம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார். எங்களது கனவு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #tamilisai #kanimozhi #gsttax

Tags:    

Similar News