செய்திகள்

ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது ஏன்? - ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு நோட்டீஸ்

Published On 2019-03-15 15:52 IST   |   Update On 2019-03-15 15:52:00 IST
அரசியல் தலைவரான ராகுல் காந்தியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது ஏன்? என ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #StellaMariscollege #RahulinChennai
சென்னை:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 13-ம் தேதி தொடங்கினார். முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல்  நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார்.



இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது அரசியல் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் கலந்துரையாடல்  நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது ஏன்? என ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #StellaMariscollege #RahulinChennai 
Tags:    

Similar News