உள்ளூர் செய்திகள்
இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த வாலிபர் சாவு
- ஈச்சங்காடு-கவுண்டனூர் கூட்ரோடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மாது (வயது33). இவர் இருசக்கர வாகனத்தில் ஈச்சங்காடு-கவுண்டனூர் கூட்ரோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனயைில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாது உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.