உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
நோய்கொடுமையால் பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
- கடந்த ஒரு வருடமாக காசநோயால் பாதிக்கப்பட்டு இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து பிளேடால் தனக்கு தானே கழுத்தை அறுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் சிறப்பாறை அருகே உள்ள சீலமுத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வ ரன்(35). கூலித்தொழிலாளி. இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர். ஈஸ்வரனுக்கு கடந்த ஒரு வருடமாக காசநோயால் பாதிக்கப்பட்டு இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இருந்தபோதும் நோய் குணமாகாததால் சம்பவ த்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த ஈஸ்வரன் பிளேடால் தனக்கு தானே கழுத்தை அறுத்து மயங்கி விழுந்தார்.
க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.