உள்ளூர் செய்திகள்
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
- வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முபாராக் (வயது27). இவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும், உடல் நிலை சரியில்லாததால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், எந்த பலனும் அளிக்காததால் மனவேதனை அடைந்த முபாராக் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.