உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த தனியார் பள்ளி பஸ்.

திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பஸ்சை திருடி சென்ற வாலிபர் கைது:பஸ் சேதமானதால் போலீசார் விசாரணை

Published On 2023-09-23 09:15 GMT   |   Update On 2023-09-23 09:15 GMT
  • மாணவர்களை ஏற்றி அவரவர் இடத்தில் இறக்கி விட்டு அதே பகுதியில் நிறுத்திவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
  • ரோந்து போலீசார் அந்த பள்ளி பஸ்சை வேப்பூர் பகுதியில் மடக்கி பிடித்தனர்

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோலியூர் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சை டிரைவர் நேற்று மாலை மாணவர்களை ஏற்றி அவரவர் இடத்தில் இறக்கி விட்டு அதே பகுதியில் நிறுத்திவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார்.நள்ளிரவு 2 மணி அளவில் அங்கு வந்த விருத்தாசலம் வி.கநகரை சேர்ந்த சிவக்குமார் மகன் அருணாச்சலம் (வயது 23) அந்த பள்ளி பஸ்சை திருடி சென்றுள்ளார். இதனையடுத்து பஸ் திருடி செல்லும்போது டிரைவருக்கு செல்போனிற்கு டிராக்கிங் மூலம் குறுஞ்செய்தி வந்தது. இந்த செய்தி மூலம் டிரைவர் பஸ் செல்லும் வழியை பார்த்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவ குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து போலீசார் அந்த பள்ளி பஸ்சை வேப்பூர் பகுதியில் மடக்கி பிடித்தனர். உடனே பஸ்சில் இருந்த அருணாச்சலம் தப்பி ஓடினார். போலீசார் அவரை பின்தொடர்ந்து மடக்கி பிடித்தனர். போலீசார் பஸ்சை ஆய்வு செய்தபோது பஸ்சின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்து இருந்தது. இதனையடுத்து வேப்பூர் போலீசார் திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் பஸ் மற்றும் பஸ்சை திருடி சென்ற அருணாச்சலத்தை ஒப்படைத்தனர். திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் பஸ் சேதமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News