உள்ளூர் செய்திகள்

தொழிலாளியை வெட்டிய வாலிபர் கைது

Published On 2022-06-13 09:14 GMT   |   Update On 2022-06-13 09:14 GMT
  • மாதேஷ் அரிவாளோடு சிவனேசன் வீட்டிற்குச் சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார்.
  • குமரேசன் வீட்டில் சித்தாளாக வேலை பார்த்து வந்த பாஸ்கர் தடுக்க முயன்றபோது வெட்டு பட்டு படுகாயமடைந்தார்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள பாவட்டக்குடி அரண்மனை தெருவில் உள்ள சிவனேசன் என்பவரது வீட்டில் வேலை நடந்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு டீ வாங்க கடைத் தெருவுக்குச் சென்று திரும்பி வந்துள்ளார்.

அப்போது பாவட்டக்குடி, வஉசி தெருவை சேர்ந்த மணிவண்ணன் மகன் மாதேஷ் (வயது 17), சிவனேசன் மீது இருசக்கர வாகனத்தில் வந்து மோதுவது போல் சென்றுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிவனேசன் வீட்டுக்கு சென்ற நிலையில் மாதேஷ் அரிவாளோடு சிவனேசன் வீட்டிற்குச் சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார்.

அப்போது மாதேஷ் அரிவாளை எடுத்து சிவனேசனை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த குமரேசன் வீட்டில் சித்தாளாக வேலை பார்த்து வந்த பாஸ்கர் (49) தடுக்க முயன்றபோது வெட்டு பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் மாதேஷ் மீது வழக்கு பதிவு செய்து பேரளம் போலீசார் கைது செய்தனர்.


Tags:    

Similar News