உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே தாய்-மகனை தாக்கிய வாலிபர் கைது
- திருவெண்ணைநல்லூர் அருகே தாய் மற்றும் மகனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- ஆத்திரமடைந்த ராஜா, இளவரசியை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகாபதி மனைவி இளவரசி (வயது 34). இவரது 10 வயது மகன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராஜா (25), சிறுவனை அடித்து துன்புறுத்தியுள்ளார். இத்தகவல் அறிந்த இளவரசி, எதற்காக எனது மகனை அடித்தாய் என, ராஜாவிடம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த ராஜா, இளவரசியை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார்.இது தொடர்பாக திருவெண்ணை நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.