செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
- காயத்ரிபரிதா தனது செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாடியதாக தெரிகிறது.
- தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டியில் வசித்து வருபவர் சித்தன்பரிதா.
கணவரை இழந்த இவர் அதே பகுதியில் சிறிய பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் காயத்ரிபரிதா(வயது16). 10-ம் வகுப்பு படித்து உள்ளார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவர் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு காயத்ரிபரிதா தனது செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாடியதாக தெரிகிறது. இதனை அவரது தாய் கண்டித்தார்.
இதில் மனவேதனை அடைந்த காயத்ரிபரிதா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு தாய் சித்தன்பரிதா அதிர்ச்சிஅடைந்தார்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் காயத்ரி பரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.