திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணுடன் வாலிபர் உல்லாசம்- போலீசார் விசாரணை
- சில நாட்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
- போலீசார் காளிராஜ், அவரது பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அருகேயுள்ள புளியானூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அந்த நிறுவனத்தில் இவருடைய உறவினரான நாகனாம்பட்டி பகுதியை சேர்ந்த சிவராஜ் மகன் காளிராஜ் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இருவரும் பழகி வந்தனர். சில நாட்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி திரிந்தனர். காளிராஜ் பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள காளிராஜ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காளிராஜின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த பெண் ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் காளிராஜ், அவரது பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.